Tuesday, August 19, 2008

வயது வந்தும் வயதுக்கு வராதவள்.

எல்லா மரங்களும்
வஸந்தத்தால்
வாழ்த்தப் பட்ட போது
ஏன் இந்த மரம் மட்டும்
இத்தனை வஞ்சிக்கப் பட்டது...!?!?

இந்த வருடத்திற்கு மட்டும்
ஏன
டிசம்பரில் இத்தனை
நாட்கள்..!?!
பூக்களெல்லாம்
பூபாளக் கச்சேரி செய்ய
பணிக்கப் பட்ட போது ..
ஏன்
இந்த மொட்டு மட்டும்
ஆதங்க ஆவர்த்தனம் பண்ண
சபிக்கப் பட்டது .. !?!?!

எல்லா நார்களுக்கும்
பூக்கள் ஒதுக்கப் பட்டபோது
ஏன்
இந்த நாரில் மட்டும்
முட்கள் தொடுக்கப் பட்டது ... !?!?!

எல்லா கண்களின்
கண்ணீரையும்
ஆனந்தம் வந்து
அழிவித்த போது
ஏன்
இந்த கண்களில் மட்டும்
சோகம்
சுமையிறக்கிவிட்டுப் போனது .. !?!?!
சித்திரை மலர்களெல்லாம்
டிசம்பரிலேயே மலரும்போது
இந்த டிசம்பர் மலர் மட்டும்
சித்திரை பல வந்தும்
ஏன்
மலரவில்லை...!?!?!
எல்லா பயிரகளும்
பருவத்தே பயிரான போது
இந்த பயிருக்கு மட்டும்
ஏன்
பருவம் வரவேயில்லை...!?!?!?!

3 comments:

Anonymous said...

//-- எல்லா நார்களுக்கும்
பூக்கள் ஒதுக்கப் பட்டபோது
ஏன்
இந்த நாரில் மட்டும்
முட்கள் தொடுக்கப் பட்டது . .. ///


Nalla varigal...! Vaazhthhukkal.

Anonymous said...

வேகமாக வளர்ந்து வரும் Fast Food யுகத்தில் பெண் குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே வயதுக்கு வந்து இரண்டுங்கெட்டானாக வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் முரணனான சிந்தனை.

chinathambi said...

நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com