Wednesday, June 4, 2008

முகம்

இன்முகம் மட்டும் காட்டி
இனிப்பாய் வார்த்தை பேசி
உள்மனம் மூடி வைத்து
கசப்பை அதிலே தேக்கி
விசமாய் கொட்டித் தீர்க்கும்
மனிதராய் பெயர் சொல்லிடும்
எவர்க்குமே சுயமாய் இங்கே
முகமென்று ஒன்று இல்லை!
முகவரி மட்டும் இங்கே
அழகாய் இருந்து விட்டு
உள்ளுறை வார்த்தை யெல்லாம்
அழுக்காய் போன தென்ன ?
குரங்கு கூட்டம் கூட
வஞ்சனை சிறிதும் இன்றி
வனப்புடன் வாழும் போது
மானிடம் மட்டும் ஏன்
வஞ்சனை தாங்க லாச்சு?
சிந்தனை சிறிதும் இன்றி
செயல்பட திறனும் இன்றி
வஞ்சனை ஒன்றை தவிர
மானிடம் வேறறிந்த தில்லை!
வஞ்சனை கொண்ட வர்க்கு
மோதிட எண்ணம் தோன்ற
நேரிடையாய் மோதிக் கொள்ள
சுயமாய் முகமொன்று இல்லை!
சீறிச்சினந்து கொள்ள இவர்
பாம்புமுகம் படைத்தா ரில்லை!
பதுங்கி பாய்ந்து தாக்க
புலிமுகம் கொண்டா ரில்லை!
நிழலாய் கொண்ட முகங்கள்
நிதர்சனமாய் ஆவ தில்லை!
இதனை புரிந்து விடின்

மனிதரில் மிருகம் இல்லை

1 comment:

Anonymous said...

மனிதரில் மிருகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று..! பசிக்காக வேட்டையாட தொடங்கிய மனிதனுக்கு இன்று வேட்டையாடுவதற்க்காகவே பசிப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்!