Friday, May 30, 2008

சப்தமாய் ஒரு மௌனம்

தற்செயலாய்
உன் நினைவு வர
நீ எதிரே நிற்கிறாய்!

நான் எல்லாவற்றையும்
விசாரித்துவிட்டு
உன்னையும் மெல்ல
விசாரிக்கிறேன்.
நீ எப்போதும் போல
மௌனியாய் நிற்கிறாய்!

வார்த்தைகள் பேசாதவற்றை
மௌனம் பேசுமாம்.
எங்கோ படித்திருக்கிறேன்
இங்கே அனுபவிக்கிறேன்.

நீ
எல்லாம் சொல்கிறாய்
உன் ஒற்றை
மௌனத்தால்.

உன் மௌனம்
துரோணரின் சக்கர வியூகம்!
நான் சாதாரண அபிமன்யு!
உடைத்து உள்ளே போனவன்
மீண்டு வரமுடியாமல்..... !


உரக்கப் பேசியவர்கள்
பேச்சுடனே போய்விட
உன்னுடைய
உரத்த மௌனம் -

என்னை உலுக்கிவிட்டதடி !

2 comments:

Aruna said...

சப்தமாய் ஒரு மவுனம் என்னை மவுனமாய் கொன்றது.
அன்புடன் அருணா

Esakkiappan Barathan said...

நன்றி அருணா! எத்தனை பேருக்குத் தெரியும் மௌனத்தைப் போல உயிர் உருக்கும் ஆயுதம் வேறில்லையென..!